பொதுமக்களே உஷார்... சென்னையில் ரயில் நிலையங்கள், பொது இடங்களில் செல்போன் திருடும் நவோனியா கும்பல்!

 
நவோனியா கும்பல்

 

சென்னையில் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில்  நவோனியா கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபடுவதாக  ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்த கும்பல் கூட்டம் நிறைந்த இடங்களில் துண்டுகள், கைகுட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வருவது  உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நவோனியா கும்பல்
இவர்கள் பயணிகள் கண் அசரும் நேரத்தில் பணத்தையோ அல்லது செல்போனையோ திருடிவிட்டு வந்த வேலை முடிந்துவிட்டது என கிளம்பி விடுகின்றனர்.

நவோனியா கும்பல்

இச்சம்பவம்  தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

 

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?