உஷார்... இந்த 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... குடையோட கிளம்புங்க!

 
மாவட்ட வாரியாக ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!!

அவசியமில்லாம வெளியே கிளம்பாதீங்க. முக்கிய வேலையாக கிளம்பினால் மறக்காம குடையோட கிளம்புங்க. மழை காலங்களில் ஒதுங்குவதற்கு மரத்தின் கீழோ, பாழடைந்த கட்டிடங்கள், பேருந்து நிலையங்களுள் தஞ்சமடையாதீங்க. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், 7 மாவட்டங்களில் மிக கனமழையும் 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மழை

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web