உஷார்... ரூ.10 நாணயம் வாங்க மறுப்பவர்களுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை! கலெக்டர் எச்சரிக்கை!

 
ரூ10

மக்களிடையே இருந்து வரும் சில பயங்களையும், புரிதல்களையும் அத்தனை எளிதில் மாற்ற முடியாது. போலியோ நோய்க்கு எதிராக மிகப் பெரியளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தருவதற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. போலியோவுக்கு எதிராக ரஜினிகாந்த் செய்த விளம்பரப்படம் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு வகித்தது. அப்படி, மோடி கொண்டு வந்த ரூ.2000, ரூ.1000 பணமதிப்பிழப்பு விவகாரம் மக்களின் ஆழ்மனதில் பயத்தை விதைத்துள்ளது. அப்போதில் இருந்தே அடுத்து, ரூ.10 நாணயங்களைத் தான் தடை செய்ய போகிறாராம் என்று வதந்தி, தீ போல பரவி வந்தது.

இப்போதும் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ரூ10 நாணயங்கள் செல்லாது என்கிற நிலை தான். இவைகள் பெரும்பாலும் பேருந்துகளில் நடத்துனர்கள், கடைகளில் வணிகர்கள் வாங்குவதில்லை. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இவை பெரும் புகாராக எழுந்துள்ளன. இது குறித்து  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அதுகுறித்து  ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் ரூ.10  நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவி வருகிறது.

ரூ10

இதனால்  பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் ரூ10  நாணயம் மறுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.  இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10  நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் 2005ல்  வெளியிட்டது. அதனை தொடர்ந்து ரூ.10 நாணையம் புழக்கத்தில் வரத் தொடங்கியது. இதுவரை 14 வகையான ரூ.10 நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

ரூ10

ஒன்றிலிருந்து மற்றொன்று டிசைன் வாரியாக மாறுபட்டுள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு வகை ரூ.10  நாணயத்தில் ரூபாய் சின்னம் இருக்கும். மற்றொன்றில் ரூபாய் சின்னம் இருக்காது. எனவே அதனை போலியான நாணயம் என நம்பத் தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன  என வதந்தி பரவி வருகின்றன. ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்” என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web