உஷார்... செல்போனில் பேசிய போது மின்னல் தாக்கி வாலிபர் பலியான சோகம்!

 
ஜெயக்குமார்

மழை பெய்யும் போது, நடுவழியில் ஒதுங்க இடம் பார்ப்பது பொதுவாக மக்களின் இயல்பு. அப்படி மழைக்கு ஒதுங்கி நிற்கும் போது, பாழடைந்த கட்டிடங்கள், மரங்களின் கீழ் நிற்க கூடாது என்பார்கள். இடி விழும் அபாயமோ, மழை காரணமாக பாழடைந்த கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாலும் முன்னெச்சரிக்கையாக அப்படி கூறுவார்கள். இந்நிலையில், மழைக்காலங்களில் ஜாக்கிரதையாக இல்லாமல் செல்போன் பயன்படுத்துவதும் அபாயம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்க. திருச்சி அருகே மழை பெய்யும் போது, செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பல்லவபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். குமளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஜெயக்குமார், நேற்று மாலை முதல் லால்குடி பகுதியில் பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்து வந்த நிலையில், தனது வீட்டில் இருந்தபடியே ப்ளூடூத் மூலமாக செல்போனில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக ஜெயக்குமார் மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த ஜெயக்குமாரை, குடும்பத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மின்னல்

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web