பத்ர ராஜ யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்... வெளியூர், வெளிநாடு வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!
செப்டம்பர் மாத கிரக நிலைகளைப் பார்க்கும் போது, இந்த மாதத்தில் சூரிய சந்திர கிரகணம், சிம்மத்தில் நுழைகிற சூரியன், புதன், கேது சேர்க்கை என கிரக சூழல் நிலவுவதால் இந்த மாதத்தில் பத்ர ராஜ்யோகம் ஏற்பட உள்ளது. பத்ர ராஜயோகத்தால் மிதுனம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும், செல்வவளத்தைத் தரப் போகிற மாதமாகவும் செப்டம்பர் மாதம் அமைந்திருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் வருகின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கோங்க. அதே சமயத்தில் வார்த்தைகளை கவனமாக பிரயோகிங்க. வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடித்தால் அதிர்ஷ்டம் நிச்சயம் இவர்களுக்கு கைக்கொடுக்கும்.
மிதுனம்:
செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் அலைமோதும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல நேரிடும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். இந்த மாதத்தில் உங்களின் நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தினால் அதிர்ஷ்டமும், செல்வ வளமும் அலைமோதும். சோம்பலைத் தவிர்த்திடுங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட காலங்களாக இழுப்பறியாக நீடித்து வரும் சொத்து பிரச்சனை சாதகமாக முடிவுக்கு வரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த செம்படம்பர் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். கடினமான சூழலிலும் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், ஆதரவும் உண்டு. உறவினர்களிடையே மரியாதை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறுவீர்கள். அலுவலகத்தில் கை ஓங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் மங்களகரமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடியும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அரசாங்க வேலைகளில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். நீங்கள் செய்த முதலீடுகள் எதிர்பாராத அளவில் லாபத்தை தரும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் மங்களகரமான, வெற்றிகள் நிறைந்த பலன்களைத் தர காத்திருக்கிறது. தொழில் தொடர்பாக பெரிய வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலையில் மகிழ்ச்சியை நிறைந்திருக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். பெரிய பெரிய வாய்ப்புகள் வாசலைத் தட்டும். செல்வாக்கு அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியை சேர்ந்தவர்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு மேம்படுத்தும் விதமாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வதால் உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதனால் உங்கள் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். காதல் கைகூடும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
