பாரதியார் முன் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி... !!

 
சாதிமறுப்பு திருமணம்

சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் வானகம் பகுதியில் இயற்கை விவசாயி பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது கல்லூரி சார்பாக மாணவர்களை இன்டன்ஷிப் அனுப்புவது வழக்கம். அந்த வகையில் ராஜ்கமல் கல்லூரி சார்பாக இன்டன்ஷிப் வந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வைசாலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்த நிலையில் காதலாக மாறியது.

5வது திருமணம்


 கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சாதிமறுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திட சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால் இவர்கள் காதல் குறித்து வீட்டில் பேசிய நிலையில் இரு வீட்டார் தரப்பிலும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.சேலம் சுப்பராயன் சாலையில் உள்ள பாரதியார் சிலை முன்பு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

சாதிமறுப்பு திருமணம்

அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் உறுதிமொழி ஏற்றனர். பல லட்ச ரூபாய் செலவு செய்து திருமண முடிக்கும் இன்றைய காலகட்டத்தில் சில லட்சியங்களோடு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியின் செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web