அருணாச்சலப் பிரதேச முதல்வராக பீமா கந்த் பதவியேற்பு!

 
பீமா கந்து அருணாச்சல பிரதேசம்
 

இன்று காலை அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக பீமா கந்து மீண்டும் பதவியேற்றுள்ளார். க உள்ளார். முன்னதாக அருணாச்சல பிரதேசத்தில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக பீமாகந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல்வராக பதவியேற்றுள்ளார்.  
பீமா கந்து கவர்னர் கே.டி.பர்நாயக்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று ஜூன் 13ம் தேதி வியாழக்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார்.  

இது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் அவரது தலைமையின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவர் தேர்தலுக்கான பார்வையாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தருண் சுக் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த அருணாசலப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 46 இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 5 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களையும், அருணாச்சல மக்கள் கட்சி 2 இடங்களையும், காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தையும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!