பிக்பாஸ் அட்ராசிட்டி... கதறி அழுத நிக்சன்... சமாதானப்படுத்தும் ஜோவிகா... வைரல் வீடியோ..!!

 
நிக்சன்

பிக் பாஸ் சீசன் 7ல் ரெட்கார்டு சர்ச்சை தொடர்ந்து கொண்டே உள்ளது. பார்வையாளர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.  கமல்ஹாசன், பிரதீப் பேசுவதற்கான இடம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டும்  எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில்  கமல்ஹாசன் மாயா, பூர்ணிமா, ஜோவிகா கேங்குடன் விசாரணை நடத்தினார் . ஆனால் அவர்கள் அனைவரும்  பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயத்தில் உறுதியான கருத்தை தெரிவித்தனர்.


இது குறித்து  பிரதீப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது பிரதீப் தன் தவறை அவர் உணர்ந்து மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை.  அப்படியே அவர் பேசினாலும் தான் அப்படித்தான் வளர்ந்தேன் எனப் பேசிக் கொண்டே போனதாலும்தான் அவரை மேற்கொண்டு பேச விடாமல் ரெட் கார்டு கொடுத்ததாகவும் கமல் கூறியுள்ளார். கமல்ஹாசன் இது குறித்து அளித்த விளக்கத்தில் ” பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா அல்லது இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாமா எனக் கேட்டார். அப்போது பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுப்பதே சரியான முடிவு. இது தான் பெரும்பாலான போட்டியாளர்களின் கருத்தாக இருந்தது. அதை தான் நான் செயல்படுத்தினேன்.  ” எனக் கூறினார்.  

பிக்பாஸ் 7

பிரதீப்  வெளியேறியதும் நிக்சன் கதறி அழ அகம் டிவி வழியே அவரைப் பார்த்த ஐஷூ சமாதானப்படுத்தினார்.இதற்கு பார்வையாளர்கள் சிரிக்க, கமலும் அமைதியாக சிரித்துக் கொண்டே நக்கலாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்லாது, ஐஷூ வெளியேறியதற்கு பிக் பாஸ் இல்லத்தில் இருந்த போட்டியாளர்களும் வெளியே இருந்த பார்வையாளர்களும்தான் காரணம் என நிக்சன் சொல்லி கதறி அழுது கொண்டிருந்தார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web