சூடு பிடிக்கும் பிக்பாஸ் 8... நீங்க போனா சரியா வராது... கதறி அழும் ஜாக்லின்!
பிக் பாஸ் சீசன் 8 தொடங்குவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு, முதல் நாளே எலிமினேட் என சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான ப்ரோமோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி இன்று இரண்டாவது 2 வது நாள் . பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தொடங்கிய முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு விட்டது. அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிசன் போட, பெண்கள் அணி பெரிய மனதுடன் ஏற்று கொண்டது. முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான். நிகழ்ச்சி குறித்த தகவல்: மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்துள்ளனர். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

முதல் வரத்திற்கான கேப்டன் டாஸ்க்கில் தக்சிகா வெற்றி பெற்று தலைவராகி இருக்கிறார். அதே போல் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 2 வது நாளுக்கான முதல் ப்ரோமோ: இதில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இந்நிலையில் இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பெண்கள் வெர்சஸ் ஆண்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கு செல்ல வேண்டும். பெண்கள் அணியில் இருந்து நம்பிக்கை கூறிய ஒருவர் ஆண்கள் அணிக்கு செல்ல வேண்டும். பெண்கள் அணியில் ஜாக்லின், முதல் நாள் நடந்த சண்டையை வைத்து என்னை அனுப்ப மாட்டீர்கள் என பேசி இருந்தார். உடனே சுனிதா, நீங்க உள்ள, வெளிய இல்ல சோபா எங்க வேணாலும் படுங்க. இப்ப விஷயம் அது இல்லை. நீங்க போனா சரியா இருக்காது எனக் கூறியதும் ஜாக்லின் வருத்தப்பட்டு வெளியே சென்று தனியாக அழுது கொண்டிருக்கிறார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
