பிரதீப் ரீ எண்ட்ரி... பிக்பாசில் பரபரப்பு.. !!

 
பிக்பாஸ்7

 பிக் பாஸ்  சீசன் 7 நாளுக்கு நாள் சர்ச்சைகளும், புகார்களும் எழுந்து வருகின்றன. ஆக்ரோஷமான சண்டைகள் கமலின் சமாதானங்கள் தினசரி பஞ்சாயத்துக்கள் அதிகரித்து வருகின்றன.  இந்த பிக்பாஸ் சீசனில்  தொடக்கம் முதலே 2 அணியாக  பிரிந்து போட்டியாளர்கள் மோதிக்கொள்கின்றனர்.  18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் வாரம் அனன்யா ராவ் ,  அவரை தொடர்ந்து பவா செல்ல துரை தானாக முன்வந்து வெளியேறினார்.  இவரை தொடர்ந்து விஜய் வர்மா, வினுஷா, யுகேந்தரனும்  அதன் பின்னர் அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

பிக்பாஸ் 7

இதனால் மீண்டும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அன்னபாரதி ஒரே வாரத்தில் வெளியேறினார்.  இவரை தொடர்ந்து பிரதீப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக பிரதீப் ஆண்டனியும் ரெட் கார்டுடன்   வெளியேற்றப்பட்டார்.
 இதனை   ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், விஜய் டிவி தரப்பில் இருந்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.   அத்துடன் மீபத்தில் பிரதீப் போட்ட ஒரு டீவீட்டில் "நான் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சென்றேன் எனில்  ஒரு படத்தின் 2ம் பாதியில் வருகின்ற Revenge காட்சிகள் எப்படி இருக்குமோ? எனது என்ட்ரி அப்படி இருக்கும் எனக் கூறியுள்ளார்.  ஆனால் பிரதீப் ரீஎண்ட்ரிக்கு வாய்ப்பே இல்லை என்பதை, இன்றைய   புரோமோவில் உறுதி செய்தார் கமல். அதே போல்.. இன்றைய தினம் மாயா - பூர்ணிமாவின் புல்லி கேங்கிற்கு சம்பவம் இருப்பதையும் உறுதி செய்துள்ளார்.  

பிக்பாஸ் 7


 பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீப் வந்தால்... தன்னுடைய தீர்ப்பு தவறு என்பதை தானே ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் என்பதற்காகவும், பிரதீப் விஷயத்தில் தீர விசாரித்து எடுத்த தீர்வு இது என கூறி கூறி கமல் தன்மீதான குற்றத்தை நியாயப்படுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் முதல் புரோமோ வெளியான பின்னர், செஸ்ஸில் ராஜாவை திட்டம் போட்டு கீழே சாய்க்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கேம் ஓவர் என கூறியுள்ளார் பிரதீப். ஹேஷ் டேக்கில், ரெண்டு கை ரெண்டு கால் இல்லனா கூட அவன் பொழச்சிப்பான் சார், கெட்டப்பையன் சார் அவன் என ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டுள்ளார். அதேபோல், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன் .  நல்லாஇருங்க சார்  எனவும்  பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது."

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web