ஜூன் 1 முதல் சிலிண்டர் முதல் லைசன்ஸ் வரை அதிரடி மாற்றங்கள்!

 
ஜூன்

மே மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் தொடங்கி பலப்பல மாற்றங்கள் என்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் மாற்றங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி  எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திருத்தி அமைத்து வருகின்றன.  அதேபோல வரும் மாதம் ஜூன் 1 ம் தேதி எரிவாயு சிலிண்டர் விலை வெளியிடப்படும். 
ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான தேதி ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் எந்தவொரு கட்டணமும் இல்லாமல் ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம்.

சிலிண்டர்
அதன்பிறகு  ஆதார் மையத்திற்குச் சென்று திருத்தங்களை மேற்கொண்டால், ஒவ்வொரு திருத்தத்திற்கும் ரூ.50 கட்டணம் கொடுக்க வேண்டும்.ஜூன் 1 ம் தேதி  முதல் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்று ஓட்டுநர் உரிமைத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் கார்டு  ஆதார்
திருத்தி அமைக்கப்பட்ட புதிய விதியின்படி, ஆர்டிஓவிடம் நேரில் சென்று தேர்வு எழுதத் தேவையில்லை.  அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு விடும்.  ஜூன் 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 வரை அபராதம் செலுத்த வேண்டும். அதிகரித்து வரும்  சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!