பிக்பாஸ் 8 அப்டேட்ஸ் | முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்... இந்த சீசனின் காதல் ஜோடி யார்?
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் காதல் ஜோடி யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் போட்டியாளர் யார் என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கியது. இந்த சீசனில் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்குப் பதிலாக விஜய்சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
📸 #PavithraJanani #BigBossTamil8 #Bigbosstamilseason8 pic.twitter.com/bhlZwilMqV
— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) October 7, 2024
📸 #PavithraJanani #BigBossTamil8 #Bigbosstamilseason8 pic.twitter.com/bhlZwilMqV
— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) October 7, 2024
விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதைப் பார்ப்பதற்காகவே வழக்கத்தை விட இந்த சீசன் பிக்பாஸ் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்தது.
பிக்பாஸ் வீட்டில் தயாரிப்பாளர் ரவிந்தர், நடிகர்கள் அருண், அர்னவ், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாச்சனா, ரஞ்சித், தீபக், சுனிதா, ஆர்.ஜே. ஆனந்தி, ஜெஃப்ரே, விஜே முத்துக்குமரன், செளந்தர்யா, அன்ஷிதா, விஜே ஜாக்குலின், சத்யா, விஜே விஷால் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த சீசன் ஆண்கள் vs பெண்கள் என்ற தீமை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிக்பாஸ் 8வது சீசனை விளையாட உள்ளனர்.

இந்த முறை ‘ஆளும் புதுசு; ஆட்டமும் புதுசு’ என்பதால் முதல் நாளே அதாவது நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திலேயேஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் சத்யா, ஜாக்குலின், ரவீந்தர், அர்னவ், சாச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி சாச்சனா முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் இல்லத்திலேயே இளம் போட்டியாளராக சாச்சனா உள்ளதால் அவரை அதிக பேர் நாமினேட் செய்து வெளியேற்றி இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், ‘அன்ஃபேர்’ என பிக்பாஸ் பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
