பெரும் சோகம்... பிக்பாஸ் ஐஷூ தாயின் கண்ணீர் பதிவு!

 
ஐஷு

பிக் பாஸ் சீசன் 7  அனல் பறக்கும் சர்ச்சைகளால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிகழ்வில்  அமீரின் தங்கையான ஐஷூ  இந்த சீசனில் போட்டியாளராக நுழைந்துள்ளார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ஐஷூ, நிக்சனுடன் ஜாலியா பேசுவது, மாயாவுடன் சேர்ந்து சதி வேலைகள் செய்வது  என அவரது செயல்பாடுகள் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின.

ஐஷு

 

 அதிலும்  பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதில் ஐஷூவுக்கும் முக்கிய பங்குண்டு. இதனால்  ரசிகர்கள் அவருக்கு நாமினேஷனில் குறைந்த வாக்குகளே கொடுத்துள்ளனர். மேலும், நிக்சனுடன் அவர் நெருக்கமாக பழகி வருவதால் வெளியே அவருடைய பாய் ஃபிரண்ட் நிரூபுக்கு துரோகம் செய்கிறாரா என்ற ரீதியிலும் அவரைப் பற்றிய கமென்ட்டுகள் எழுந்து வருகின்றன.  

ஐஷு

இந்நிலையில் தான் அவரது அம்மா ஷைஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதில் ’எல்லாவற்றையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷூ. எங்களுக்கு இந்த ஐஷூ வேண்டாம், நாங்கள் எங்களுடைய ஐஷூவை பார்க்க விரும்புகிறோம். உண்மையான கண்கள் எது, உண்மையான பொய் எது என நீ உணர்வாய் என நம்புகிறேன்’ என அந்த பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web