இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்... டிரம்ப் அறிவிப்பு!

 
டிரம்ப் மோடி
இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப்  அறிவித்துள்ளார். 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த "பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியதாவது; அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டுகிறதா? என்று கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்கையில், தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். 

டிரம்ப் மோடி

நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை. அதே வேளை சிறந்த ஒப்பந்தங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் ஒன்று விரைவில் தெரிய வரும். அது இந்தியாவுடனான ஒப்பந்தமாக இருக்கலாம், மிகப் பெரிய ஒப்பந்தமாகும்.

மேலும் எல்லோருடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை. சில நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை மட்டும் தான் அனுப்புவோம். 

மோடி ட்ரம்ப்

25, 35, 45 விழுக்காடு வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் எளிதாகும். நான் அவ்வாறு செய்வதை எனது அரசு தரப்பினர் விரும்பவில்லை. அதை ஓரளவு செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்து. அதே நேரம், நான் விரும்புவதைவிட அதிகமான ஒப்பந்தங்கள் ஏற்படவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். அனைத்து நாடுகளுடனும் அமெரிக்கா நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது