ஆட்சியை தக்க வைக்கும் NDA... தொண்டர்கள் கொண்டாட்டம்!

 
மோடி

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியவுடன், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆரம்பம் முதலே பெரும்பான்மையை நோக்கி வேகமாக முன்னேறியது. 243 தொகுதிகளில் 190-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA முன்னிலை பெற்றுள்ளது, இது 122 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை மிக எளிதாக கடந்துள்ளது. பாஜக 87, ஜேடியு 79, எல்ஜேபி 21 இடங்களில் முன்னிலையில் இருப்பது, 2020-இன் 125 இடங்களை ஒப்பிடுகையில் NDA-வுக்கு பெரும் உயர்வாகும்.

மறுபுறம் மகா கட்பந்தன் (MGB) 48 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், NDA ஆட்சி தொடரும் நிலை உறுதியாகி விட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில மணி நேரங்களிலேயே பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள பாஜக, ஜேடியு அலுவலகங்களில் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிதீஷ் குமாரின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வருவது உறுதியாகத் தெரிந்ததால், “பீகாரில் ஹோலி-தீபாவளி ஒன்று சேர்ந்து கொண்டாடப்படுகிறது” என்று ஜேடியு தலைவர் சோடு சிங் தெரிவித்தார்.

NDA வெற்றிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். எடப்பாடி கே. பழனிச்சாமி, பிரதமர் மோடி, அமித் ஷா, நிதீஷ் குமார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், “காங்கிரஸ் தலைமையிலான INDI கூட்டணியை மக்கள் நிராகரித்துள்ளனர்” என்றார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் “பீகார் அமைதி மற்றும் வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளது” எனக் கூறினார். பாஜக தலைவர் அனுராக் தாகூர், “ராகுல் காந்தி தலைமையில் 91 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது” என்று குறிப்பிட்டது கவனத்துக்குரியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!