பைக், சிலிண்டர் லாரி மீது மோதி 3 இளைஞர்கள் பரிதாப பலி...!!

 
பைக் விபத்து

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்   சஞ்சீவி. இவரது  மகன் வினோத். அதே பகுதியில் வசித்து வருபவர்  ராஜூ மகன் ராம் ,   செல்வராஜ் மகன் ஆனந்த். இருவரும் நண்பர்கள்.  இவர்கள் 3 பேரும் நேற்றிரவு பெரம்பலூருக்கு    ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆலத்தூர் தாலுகா நக்கசேலத்தில்  சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது பைக் நேருக்கு நேர் மோதியது.

விபத்து

இந்த கோர விபத்தில்  வினோத், ராம் இருவரும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ்

 அங்கு அவரும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரில் வசித்து வரும் இணைபிரியாத நண்பர்கள் மூவரும் சாவிலும் ஒன்றிணைந்தனர் என அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web