சிறைக்கு கொண்டு சென்ற போது பைக் திருடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட்டம்!

 
சஞ்சய்குமார்

 சென்னை ஓட்டேரி பட்டாளம் சூரத் பவன் தெரு பகுதியில் வசித்து வந்தவர்  சஞ்சய் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  ஏப்ரல் 29ம் தேதி இரவு 10 மணிக்கு  தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ்

இந்நிலையில் புளியந்தோப்பு சரக உதவி கமிஷனர் ராஜா தலைமையில் தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை பகுதியில் புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது  மனோஜ்குமாரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் பைக்கை திருடியது பதிவாகியிருந்தது.இதனையடுத்து அவரிடம் இருந்து  பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது.  

இதன்பின்னர் அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்காக  ஆட்டோவில் மனோஜ்குமாரை அழைத்துச்சென்றனர்.புளியந்தோப்பு நெடுஞ்சாலை செங்கை சிவம் மேம்பாலம் சந்திப்பு பகுதியில் வந்தபோது பசிக்குது என்று மனோஜ் கேட்டதால் ஆட்டோவை ஓரமாக நிறுத்தினர்.  அங்குள்ள கடையில் போலீசார் பிரியாணி வாங்க சென்றனர். அந்த சமயத்தில் திடீரென ஆட்டோவில் இருந்து குதித்து மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து  அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web