அதிர்ச்சி... பறவைக் காய்ச்சலால் உலகின் முதல் மனித மரணம்... உலக சுகாதார மையம் தகவல்!

 
பறவைக் காய்ச்சல்
 பறவைக் காய்ச்சலின் H5N2 வகை தொற்று காரணமாக உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

59 வயதான நபர் ஒருவர் மெக்சிகோ நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாகக் கொண்டு செல்லப்பட்ட பின்னர், கடந்த மே 23ம் தேதியன்று, ஐநா சுகாதார அமைப்பிற்கு, மனிதனுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதை மெக்சிகன் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்றவற்றால் அவர் உயிரிழந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
"உலகளவில் இன்ஃப்ளூயன்ஸா A(H5N2) வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு முதல் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் இது " என்றும், வைரஸின் வெளிப்பாட்டின் ஆதாரம் தெரியவில்லை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும், பறவைக் காய்ச்சல் பொதுவாக மக்களுக்கு குறைந்த ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மனித நோய்க்கும் கோழி நோய்த்தொற்றுகளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துவது இதுவரை சாத்தியமற்றது என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கறவை மாடுகளிடையே H5N1 என்ற வித்தியாசமான வைரஸ் பரவி வருகிறது. மனிதர்களிடையே ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது எனினும், மனிதர்களிடையே இருந்து இன்னொரு மனிதருக்கு இந்த தொற்று ஏற்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web