ஆஸ்திரேலியாவுக்கு பரவிய பறவைக் காய்ச்சல்.. இந்தியாவை சுட்டிக்காட்டும் உலக சுகாதார அமைப்பு!

 
பறவைக் காய்ச்சல்

இந்தியாவில் இருந்து பரவிய H5N1 பறவைக் காய்ச்சல் ஆஸ்திரேலியாவிலும் பரவியிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஜூன் 7 அன்று, ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தைக்கு H5N1 இன் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்தக் காய்ச்சல் இந்தியாவில் இருந்து பரவியிருக்கலாம் என நினைக்கிறோம். குழந்தை கடந்த மாதம் கொல்கத்தா சென்று திரும்பியிருந்தது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல்

எனினும், தங்களுக்குத் தெரிந்த மனிதர்கள் அல்லது விலங்குகளால் காய்ச்சல் வந்திருக்க வாய்ப்பில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மரபணு மாற்றப்பட்ட H5N1 வைரஸ் தென்கிழக்கு ஆசியாவில் அதிகமாக இருந்தது. நோய்த்தொற்று முக்கியமாக மனிதர்கள் மற்றும் கோழிகளில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் ஆதாரம் தற்போது தெரியவில்லை என்றாலும், இது இந்தியாவில் இருந்து தோன்றியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விக்டோரியாவைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை பிப்ரவரி 12 முதல் 19 வரை கொல்கத்தாவுக்குச் சென்றது. மார்ச் 1ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியது. மே 22 வரை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் உள்ள நெருங்கிய உறவினர்கள் எந்த அறிகுறிகளையும் உருவாக்கவில்லை.மார்ச் 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, 2 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்தது.

கோழிப்பண்ணைக்குச் செல்வதன் மூலமோ, உயிருள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் இருக்கும் சந்தைக்குச் செல்வதன் மூலமோ அல்லது வீட்டுப் பறவைகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ பொதுவாக கோழிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது. அரிதாக, பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சி அல்லது முட்டைகளைக் உண்பதன் மூலமும் பறவைக் காய்ச்சல் பரவுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக விக்டோரியா மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web