இசை ராஜாவுக்கு பிறந்த நாள்! இளையராஜா பற்றி 81 தெரியாத தகவல்கள்!

 
இளையராஜா பாடலுக்கு புதிய ஆப் அறிமுகம்!!

இசைராஜாவுக்கு வயசு 81. இசைக்கு வயசு ஏதுன்னு பெருமை பேசலாம். தனது இசையால் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்தவர் இளையராஜா. சந்தோஷமோ சோகமோ... கொண்டாட்டமோ, பெருங்கூட்டமோ, தனிமையோ, காதல் தவிப்போ... எல்லாத்துக்கும் பொருந்தும் இளையராஜாவின் இசை கோர்வைகள். அவரைப் பற்றிய 81 சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறோம்.

இளையராஜாவின் இசையை உலகமே கேட்டு ரசிக்குது. ஆனால் பயணங்களில் இளையராஜா ரசிக்கிறது நாதஸ்வர இசையைத் தான்.

நிறைய, பழைய, கேள்வியே படாத நாதஸ்வர வித்வான்களின் பெயர்கள் எல்லாம் இளையராஜாவிற்கு அத்துப்படி. தனித்தனியாய் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அவர்களின் இசையை நண்பர்களிடம் சிலாகித்துப் பேசுவார்.

இளையராஜாவின் ஆல்டைம் பேஃவரைட் சாப்பாடு ரசம் சாதம் தான். எங்கே வெளியூர் போனாலும் அவர் விரும்பி கேட்பது ரசம் தான். ஒரு குழந்தையின் குதூகலத்தோட ரசித்து சாப்பிட ஆரம்பித்துவிடுவார்.

இசை மேதை இளையராஜாவுக்கு 78வது பிறந்தநாள்! இளையராஜா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

போட்டோகிராஃபி மேல் தீராத காதல். இளையராஜா விரும்பி புகைப்படங்கள் எடுப்பதைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர், புகைப்படக்கலைப் பற்றிய ரொம்ப பேஸிக்கான ஒரு புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அதைப் படித்தப்பின் இளையராஜா எடுத்தப் புகைப்படங்கள் எல்லாம், ரொம்ப தேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்தப் படங்களைப் போல இருக்கிறது என்று அந்த நண்பரே வியந்தாராம். அந்த நண்பர் கேமிரா கவிஞர் பாலுமகேந்திரா. அதன் பிறகு ஒரு விலையுயர்ந்த கேமிராவை பாலுமகேந்திராவுக்கு பரிசளித்தார் இளையராஜா.

தன்னோட முன்னோடிகளை உளமாற நேசித்து, அவர்கள் மீது அளவுகடந்த மதிப்பும் வைத்திருக்கிறார் இளையராஜா. ‘இதுவரை நான் வாழ்ந்த, சாதிச்ச எல்லாமே அவரது பாதங்கள்ல நான் சமர்பிக்கிறேன்’ என்று எம்.எஸ்.வி. பற்றி உருக்கமாகச் சொல்வார்.
தனது இயற்பெயரையே பட்டப்பெயராக பெற்றவர் இளையராஜா ஒருவராக தான் இருக்க வேண்டும். ஞானதேசிகன் என்பது இளையராஜாவின் இயற்பெயர். சினிமாவில் இளையராஜாவாக இருந்தவர், தனது இசை பயணத்தின் வெற்றிகள் மூலமாக மக்கள் மனதில் இசைஞானியாய் வீற்றிருக்கிறார்.

ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கும் மேலான இளையராஜாவின் இசைப் பயணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இனி யார் ஒருவரும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைக்க முடியாது. ஏறத்தாழ வருடத்திற்கு 25 படங்களுக்கு இசை என்கிற விகிதத்தில் அமைகிறது இளையராஜாவின் இசைப் பயணம்.

கர்நாடக இசையில் ‘பஞ்சமுகி’ என்கிற ராகத்தை உருவாக்கியவர் இசைஞானி தான்.

இளையராஜா
இளையராஜா ட்ரினிட்டி காலேஜில் படித்தப் பொழுது கிளாசிக்கல் கிட்டாரில் எட்டு கிரேடும் முடித்து, தங்கப் பதக்கம் பெற்றவர்.

முதல் படமான ‘அன்னக்கிளி’ க்கு இசையமைக்க வந்த போது, மின்சாரம் தடைப்பட்டு, வாசிக்க வைத்திருந்த கோப்புகள் அத்தனையும் சேமிக்கப்படாமல் போனது. மீண்டும் முதலில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து, இசையை முடித்துக் கொடுத்தார் இளையராஜா. அதன் பின்னர் ராஜாவின் வாழ்வில் என்றென்றும் புகழ் வெளிச்சம் தான்.
ஆரம்ப காலங்களில் மூகாம்பிகை இஷ்ட தெய்வமாக இருந்தது. இப்போது வருடம் தவறாமல் பிறந்தநாளுக்கு மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வருகிறார்.

 

ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று வந்த ராஜா, இப்போது நினைத்தப் பொழுதெல்லாம் திருவண்ணாமலைக்குச் சென்று வருகிறார். திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் இளையராஜாவிற்கு தனியறை உள்ளது. மாதத்தின் பாதி நாட்கள் திருவண்ணாமலையும், மீதி நாட்கள் சென்னையிலும் இருக்கிறார்.

தமிழ் திரையிசையில் ஸ்டீரியோ ஃபோனிக் இசையை அறிமுகம் செய்து வைத்தவர் இளையராஜா. ரஜினிகாந்த் நடித்த ‘ப்ரியா’ படத்தில் ஸ்டீரியோ ஃபோனிக் முயற்சி செய்து, அன்றைய காலங்களில் பெரும் சென்சேஷனல் செய்தியானார்.

இந்திப் படங்களின் ஆளுமை இருந்து வந்த காலத்தில், தனது முதல் படமான ‘அன்னக்கிளி’ மூலமாகவே இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா. இசைக்காகவே ‘அன்னக்கிளி’ கடல் கடந்தும் பேசப்பட்டது.
சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75 ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின் “ராக்கம்மா கையத்தட்டு” பாடலை அறிவித்துள்ளது.

இசை மேதை இளையராஜாவுக்கு 78வது பிறந்தநாள்! இளையராஜா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

இளையராஜா தமிழ் திரையுலகில் அறிமுகமான போது, ஏற்கெனவே ராஜா என்ற இசையமைப்பாளர் இருந்தார். எனவே, புதுமையாக இருக்கட்டும் என்று ‘ஜூனியர் ராஜா’ என்கிறப் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. அதன் பிறகு ‘இளையராஜா’ என பெயர் வைத்தனர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இசையுலகை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கிறார் இளையராஜா.

‘ஹே ராம் படத்திற்கு ஒரு வீடியோவின் இதழ் அசைவை வைத்து இசை அமைத்து கொடுத்து அசத்தியிருக்கிறார் இளையராஜா. ஏற்கெனவே வேறு ஒரு இசை அமைப்பாளரை வைத்து இசை அமைத்து வீடியோ காட்சிகள் எடுத்துவிட்டனர். அதன் பின்னரே இளையராஜாவிடம் வந்தனர். மீண்டும் இசை அமைத்து காட்சி படுத்த வேண்டும் என்றால் செலவாகும் என்று கருதி, ஏற்கெனவே நடிகர்கள் இதழ் அசைத்த காட்சிகளை வைத்து அதற்கு இசை அமைத்துள்ளார் இளையராஜா.

Nothing but Wind, How to Name it போன்ற ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார் இளையராஜா. ‘வீடு’ திரைப்படத்தில் இந்த இசையை பயன்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா. இந்த இரண்டு இசை ஆல்பங்களுமே பெரும்பாலான இசை கலைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டதாகும்.

ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழகம் எங்கும் பல திரையரங்குகளில் ஓடியது ‘கரகாட்டக்காரன்’ படம். இதில், உலகத்தரத்திலான ஒரு கிராமத்து இசையை கொடுத்திருந்தார் இளையராஜா.

இந்தியாவின் இரண்டு பெரும் சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் அமிதாப்பச்சனை பாட வைத்த பெருமை இளையராஜாவையே சேரும். இசைக்கான இளையராஜாவின் அர்ப்பணிப்பு மகத்துவமானது. ராயல் பில்ஹார்மோனிக் சொஸைட்டிக்காக சிம்பனி எழுதிய முதல் ஆசிய இசை அமைப்பாளர் இளையராஜா தான்.

இளையராஜா ரீ-ரெக்கார்டிங்கிற்கு முன்னர் ஒரு முறைக்கு, இரண்டு முறை படத்தைப் பார்த்து விட்டு, மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும் பொழுதே காட்சிகள் விரிய விரிய, இசைக்கான நோட்ஸ் எழுத ஆரம்பித்துவிடுவார் இளையராஜா. திரையில் காட்சிகள் முடியும் பொழுது, இசைக் குறிப்புகளையும் முடித்து விடுவார் இளையராஜா. இந்த அளவிற்கு எந்த இசையமைப்பாளராலும் நோட்ஸ் எழுத முடியாது’ என்பது வரலாறு.

இசை மேதை இளையராஜாவுக்கு 78வது பிறந்தநாள்! இளையராஜா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீ-ரெகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம் தானாம். மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களைக் கொண்டு அந்த படத்திற்கு இசையமைக்கப்பட்டதாம். நூறாவது நாள் படத்திற்கு, மொத்த ரீ-ரெக்கார்டிங்கையும் அரை நாளில் முடித்து விட்டாராம் இளையராஜா.

இன்று வரையில் ரசிகர்கள் கொண்டாடுகிற இசைஞானியின் எந்தப் பாடலானாலும், அதை உருவாக்க, வெளிநாட்டு பயணங்கள், புல்வெளி, குட்டித் தீவு, வார.. .மாதக் கணக்கில் அலைக்கழிப்பு என்றெல்லாம் இயக்குநர்களை இளையராஜா தவிக்க விட்டதேயில்லை. ‘தென்றல் வந்து தீண்டும்போது…” பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம் தான்.

டி.ஆர்.சுப்பராமன் மேல் அவர் வைத்திருக்கிற மரியாதை அபரிதமானது. பயணங்களில் உடன் வருபவர்களிடம் கண்டிப்பாக சி.ஆர்.சுப்பராமனைப் பற்றி ஒருமுறையாவது சிலாகித்து பேசிவிடுவார்.

இளையராஜாவின் தந்தை தேயிலைத் தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். இளையராஜாவின் தந்தைக்கு 25 ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது.
தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தான் தமிழ் சினிமாவில் புத்துயிர் பெற்றன. கிட்டத்தட்ட அவர் ஒரு குட்டி ராஜா என்கிறார் இளையராஜாவின் முதல் பேட்டியை 1975ல் பிரசுரித்த எம்.ஜி. வல்லபன்.

நான் பிறந்த பண்ணைப்புரத்தில் மாலை நேரங்களில், சாலைகளில் மனம் போனபடி பாடிக்கொண்டே நடப்பேன். அது எனக்கு இன்பமான அனுபவம் என்பார் இளையராஜா.
அப்பாவை விட, அம்மா தான் குடும்பத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை இளையராஜாவே எழுதி, இசையமைத்துப் பாடிய பலப் பாடல்களில் காணலாம்.
இளையராஜாவின் இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.
மனைவி ஜீவா. சொந்த சகோதரியின் மகள். பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா, தன் சகோதரர்களுடன் சென்னைக்கு ரயில் ஏறினார்.

வருமானம் இல்லாத இளையராஜாவிடம், பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர். தன்ராஜ் மாஸ்டர் பெயரைக் கேட்கும் போதெல்லாம், இன்றும் இளையராஜாவின் கண்கள் நன்றி பணிக்கும்.

சொத்துக்களையெல்லாம் நாடகம் போட்டு இழந்திருந்தாலும், லட்சியத்தை இழக்காத அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல், தவமாக பரிணமித்திருக்க வேண்டும் என்பார் இளையராஜா எந்த ஊருக்குச் சென்றாலும், ஒரு கச்சேரிக்கு ரூ.40. பலமுறை அதைக் கூடப் பெற முடியாத நிலை 1958-68 காலக்கட்டங்களில் தொடர்ந்திருக்கிறது.

ஆர்மோனியத்தை தலையில் சுமந்தப்படி பாவலர் வரதராஜன் போனப் பாதையில் தொடர்ந்தவர் இளையராஜா.

இளையராஜா

1958ல், திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில், அண்ணன் பாவலரின் உடல்நிலை சரியில்லாததால்,’ இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துப் போ. இடையிடையே ஒரு பாடலை அவன் பாடினால் உனக்கு கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று சொல்லியிருக்கிறார் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய்.

என் அன்னையின் திருவாக்கில் தான் என் கலைப்பயணம் ஆரம்பமானது. அன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் அவ்வளவு பெரிய கூட்டம் என்று நெகிழ்வார்.

பியானோ கற்றுக் கொள்வதற்காகச் சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து, அதைக் கற்றுக் கொள், இதைக் கற்றுக் கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.

கிராமியப் பாடல்களை வாய்விட்டுப் பாடி மகிழ்ந்து, இசை ரசனையை வளர்த்துக் கொண்ட ராஜாவிற்கு, மேற்கத்திய இசை பரிமாணங்களைக் கற்றுக் கொடுத்து மகிழ்ந்தார் தன்ராஜ் மாஸ்டர்.

எம்.எஸ்.வி.யிடம் கிடைக்காத வாய்ப்பு, ஆரம்பக் காலங்களில் இருந்தே அவரது நண்பரும், பிறகு உதவி இசையமைப்பாளராகவும் இருந்த ஜி.கே. வெங்கடேஷிடம் இளையராஜாவிற்கு கிடைத்தது.

ஆரம்ப காலங்களில், தயாரிப்பாளருடனும், இயக்குநர்களுடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும் போது, மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போஸிங் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றினார் இளையராஜா.

ஆர்.கோவர்த்தனம் பாடல்களை அமைத்த ‘வரப்பிரசாதம்’ படத்திற்கு பின்னணி இசையமைத்தவர் இளையராஜா.

ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும், பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய் இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

இசை மேதை இளையராஜாவுக்கு 78வது பிறந்தநாள்! இளையராஜா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

வாரத்தின் இரண்டுநாட்கள், இரண்டு மணிநேரம் மட்டுமே தன்ராஜ் மாஸ்டரிடம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா, பின்னர் இசையின் மீதுள்ள ஆர்வத்தினால் தினமும் அங்கேயே பயிற்சி பெற ஆரம்பித்து விட்டர்.

ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்.

திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி வந்துள்ளார்கள்.

இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால் அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.
1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில் சேர்ந்தார்.

சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய அனைவருக்கும் பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது திறமையை நிருபித்தார் இளையராஜா.

இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவை, ‘என்ன பெயரில் அறிமுகம் செய்யலாம்’ எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி. ‘இது கொஞ்சம் பழையப் பெயராய் இருக்கிறது’ எனச் சொல்லி இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதும் , பென்சிலில் வரைவதும், தான் எடுத்த புகைப்படங்களை ப்ரேம் செய்து ரசிப்பதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இப்போது, ஓய்வு நேரங்களில் பேரக் குழந்தைகளுடன் குதூகலமாய் விளையாடுகிறார்.

சிபாரிசு சுத்தமாக பிடிக்காது. ஆனால் ஒரேயொரு முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு கால்ஷீட் கொடுத்தார். இளையராஜாவிடம் சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.

அன்னையின் மீது இளையராஜாவுக்குப் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின் வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு “ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன் வரும்போது நான் இங்க இருக்கனும்” என நெகிழ்ச்சியாய் சொல்வாராம்.

எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.

கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான் கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.
பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில் இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லி வியப்பார்கள் இயக்குநர்கள். வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.
ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும். சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்க வேண்டியதில்லை.

அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும். இன்று வரையிலும் இளையராஜாவின் கம்போஸிங் ஸ்டைல் இது தான்.

ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.

இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ பெற்றிருக்கிறார். இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை சாகர சங்கமம் (தெலுங்கு), சிந்து பைரவி (தமிழ்), ருத்ர வீணை (தெலுங்கு), பழஸிராஜா (மலையாளம்), தாரை தப்பட்டை படங்களுக்காக ஐந்து முறை பெற்றுள்ளார்.

இன்று வரையில் இளையராஜா பாதுகாத்து வருகிற பொக்கிஷம் ‘ஹார்மோனியம்’. ‘‘கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு, சுப்பையா ஆசாரியாரிடம் வாங்கினேன். அந்த ஹார்மோனியம் தான் இன்றும் என்னிடம் உள்ளது’’ என்று அடிக்கடி சொல்வார்.

மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை, பண்டிட் பீம்ஸென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து இளையராஜா இசையமைத்தார். இந்திய இசை மேதை நவ்ஷத் அப்பாடலை மிகவும் பாராட்டிப் பேசினார்.

இளையராஜா

கமல்ஹாசன் குரலில் இருக்கும் ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல்களைக் கம்போஸ் செய்து அவரை பாட வைத்துள்ளார். ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு பறவை’ பாடலும், ’அவள் அப்படித்தான்’ படத்தில் வரும் ‘பன்னீர் புஷ்பங்களே…ராகம் பாடுங்கள்’ என்ற பாடலும் தான் அது.

‘நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால் பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரம்மிக்கிறேன்’ என்பார் கமல்.
இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த “How to name it” இசைத் தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ‘தியாகராஜ சுவாமிகள்’ மற்றும் மேற்கத்திய இசைமேதை ‘ஜே.எஸ்.பாஹ் ’ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.

இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. *ஹிந்தி பாடல்களை கேட்பதையும் பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான சாதனையை செய்தவர் இளையராஜா.

பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த இளையராஜா, தன் இசையால் மொத்த திரையுலகையுமே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப்போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார். எப்போதும் பிரியமான உடை, எளிமையான வேட்டி தான். வெளிநாட்டுப் பயணங்களில் நண்பர்கள், ரசிகர்கள் வற்புறுத்தல்களால் கோட் சூட்டுக்கும் மாறுவார்.

ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து சாதனை படைதுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றிருக்கும் இளையராஜா, சத்தமே இல்லாமல் நிறைய குழந்தைகளின் கல்விக்காக இப்போது வரை உதவி வருகிறார்.

எத்தனைப் பெரிய விருந்தாக இருந்தாலும், இளையராஜாவின் பேவரைட் ரசம் தான்.

இளையராஜா தனிமை விரும்பி என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள். உண்மையைப் பேசுபவர்களிடம், மணிக்கணக்கில்  மனம் விட்டு பேசுபவர் இளையராஜா. திரைக்குப் பின்னாலும் அவரிடம் நடிப்பவர்களை சுத்தமாக பிடிக்காது. சகஜமாக எந்த அலட்டலும் இல்லாமல் பேசுபவர்களைப் பிடிக்கும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்