தவறான புகார் அளித்த பாஜக மாவட்ட தலைவர்.. ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்!
பழனியில் பாஜக மாவட்ட தலைவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான கூடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து காலையிலே மதுபானம் விற்கிறார்கள் என்று வீடியோ வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வு செய்ததில் மதுபானக்கூடம் திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்த நிலையில் பாஜகவினர் மது விற்பதாக புகார் தெரிவித்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தவறான புகார் அளித்த பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் மீது டிஎஸ்பி தனஜெயம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் அத்துமீறி தனியார் மதுபான கூட்டத்திற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாக பேசியது, உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்..
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!