பாஜக நிர்வாகி பெண் மருத்துவருக்கு மிரட்டல்!! மீண்டும் வெடிக்கும் ஹிஜாப் சர்ச்சை!!

 
பாஜக

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சாதாரணமாக மாணவர்கள் அளவில் தொடங்கிய சிறு விவகாரம் அரசியல் கட்சிகள் வரை பூதாகரமாக வளர்ந்து நின்றது. அதன் சுவடே இன்னும் முழுவதும் மாறாத நிலையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.  திருப்பூண்டியில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ஜன்னத். இவர் மருத்துவமனையில் ஹிஜாப்  அணியக் கூடாது என பாஜக நிர்வாகி ஒருவர்  மிரட்டல் விடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக பழகி வரும் நிலையில் மதத்தை காரணம் காட்டி பாஜக நிர்வாகி மிரட்டல் விடுத்தது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.  

ஹிஜாப் பர்தா

இதற்கு கண்டனமும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி , மனிதநேய மக்கள் கட்சி , மனிதநேய ஜனநாயக கட்சி,  விடுதலை சிறுத்தை கட்சி  பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சாலை மறியல் ஈடுபட்டனர். இந்த சூழலில்  ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

ஹிஜாப்

 அரசு பணியின்போது ஹிஜாப் ஏன் அணிய வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியதுடன்   திருப்பூண்டி அரசு மருத்துவமனை மருத்துவரை ஹிஜாபுக்கு பதிலாக மருத்துவ சீருடை அணிய சொல்லி வாக்குவாதம் செய்த பாஜக நிர்வாகி புவனேஸ்வர ராம்  மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில், இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாப்பை கழற்றச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் புவனேஷ்வரை பிடிக்கவும் காவல்துறை சார்பில்  6 பேர் கொண்ட சிறப்பு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web