பிரபல ரவுடிக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த பாஜக நிர்வாகி.. குண்டர் சட்டத்தில் அதிரடியாக கைது!

 
அலெக்சிஸ் சுதாகர்

செங்கல்பட்டு அருகே பிரபல ரவுடி சீர்காழி சத்யாவை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்த நடவடிக்கையின் போது, பால்பாண்டி, மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். இதனிடையே கைதான ரவுடி சீர்காழி சத்யாவிடம் இருந்து துப்பாக்கி, 5 தோட்டாக்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை, பல்லாவரம் பகுதியை சேர்ந்த, பா.ஜ.க சட்ட பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர், பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, வரும்போது தான் போலீஸ் கைது செய்ததாக கூறினார்.மேலும், சீர்காழி தன்னிடம் இருந்த துப்பாக்கி  அலெக்சிஸ் சுதாகர் வாங்கி கொடுத்ததாக சீர்காழி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

கைது

இதையடுத்து அலெக்சிஸ் சுதாகர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, அலெக்சிஸ் சுதாகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அலெக்சிஸ் சுதாகரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உத்தரவு நகல் சிறையில் அவருக்கு வழங்கப்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web