தறிகெட்டு ஓடிய பாஜக நிர்வாகியின் ஜீப்.. 3 பேர் பரிதாப பலி.. போரட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

 
பா.ஜ.க  ஜீப்

விருதுநகர் மாநிலம் திருச்சுழி அருகே ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தெரிவித்ததாவது, 'திருச்சுழி - மண்டபசாலை பேருந்து நிறுத்தம் அருகே டீக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று மாலை, 'டீ' குடிக்க சிலர் திரண்டிருந்தனர். அப்போது சாயல்குடியில் இருந்து மதுரை - வாலிநோக்கம் மாநில நெடுஞ்சாலையில் பா.ஜ.க கொடியுடன் கூடிய 'ஜீப்' ஒன்று மதுரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

பஸ் ஸ்டாப் அருகே 'ஜீப்' வந்தபோது, ​​திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில், டீக்கடையில், 'டீ' குடிக்க நின்றவர்களை இடித்த 'ஜீப்', அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆடு வியாபாரி காளிமுத்து (வயது 54), விவசாயி விஜயராமன் (53) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூக்கையா (50) பலத்த காயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்த மூக்கையாவை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், மூக்கையாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் திருச்சுழி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜீப்பை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web