தமிழகத்தில் பாஜக தோல்வி... பிரியாணி விருந்து கொடுத்த பெரியார் திராவிட கழகத்தினர்!

 
தமிழகத்தில் பாஜக தோல்வி... பிரியாணி விருந்து கொடுத்த பெரியார் திராவிட கழகத்தினர்!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  நடந்து முடிந்த நிலையில், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை திமுகவினர் பலரும்  பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குறிப்பாக பல்வேறு இடங்களில்  ஆட்டுக்கறி பிரியாணியை பொதுமக்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

தமிழகத்தில் பாஜக தோல்வி... பிரியாணி விருந்து கொடுத்த பெரியார் திராவிட கழகத்தினர்!

இந்நிலையில் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாமலையின் தோல்வி மற்றும் பாஜகவின் தோல்வியை கொண்டாடும் விதமாக ஆட்டுக்கறி பிரியாணி விருந்து படைத்து கொண்டாடினர். 

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் பல்வேறு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web