சாலை விபத்தில் பாஜக எம்எல்ஏ விலா எலும்பு முறிவு!
ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் பகுதியில் வசித்து வருபவர் பாஜக எம்எல்ஏ தீப்தி கிரண் மகேஸ்வரி. இவரும், அவரது உதவியாளர் மற்றும் ஓட்டுநர் இன்று ஆகஸ்ட் 30ம் தேதி உதய்பூர்-ராஜ்சமந்த் நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

உதய்பூரில் உள்ள அம்பேரி அருகே அதிகாலை 1 மணியளவில், மகேஸ்வரியின் கார் மீது குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் மோதியதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் மகேஸ்வரி எம்.எல்.ஏவின் விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அவரது உதவியாளர் ஜெய் மற்றும் ஓட்டுநர் தர்மேந்திரா ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் பயணித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
