பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கொரோனா தொற்று உறுதி... மருத்துவமனையில் அனுமதி!

 
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் வாழ்த்துரை ..!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை திரும்பினார்.

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் வாழ்த்துரை ..!

இந்நிலையில், தனக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். மருத்துவமனையில் வானதி சீனிவாசனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 வானதி சீனிவாசன்

இதையடுத்து, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்கள் வானதி சீனிவாசனின் உடல் நலம் குறித்து போனில் விசாரித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web