மோடி பதவியேற்பு நாளில் பாஜக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து... .அதிர்ச்சி வீடியோ!

 
பட்டாசு

 இந்தியா முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று   3 வது முறையாக நேற்று  மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்திலும்  தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் பிரதமராக மோடி பதவி ஏற்பதை முன்னிட்டு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்த்தனர்.

அப்போது சில பட்டாசுகள் பாஜக அலுவலகத்தின் மீது  பட்டு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  இதனால் அங்கிருந்த தொண்டர்கள் அலறி அடித்துக் கொண்டு  ஓடினர். இது குறித்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்  தீயை அணைத்தனர். இந்த  திடீர் தீவிபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!