பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது... ஜோதிமணி பேட்டி!

 
பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது... ஜோதிமணி பேட்டி!

"பாஜகவால் தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று கரூர் எம்பி ஜோதிமணி இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்த கரூர் எம்பி ஜோதிமணி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையும் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது.

பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது... ஜோதிமணி பேட்டி!

பாஜக எப்போதும் கூறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு போதும் தமிழ்நாட்டு மண்ணில் அவர்களால் காலூன்ற முடியாது. இந்தியா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். நரேந்திர மோடிக்கும் பாஜகவிற்கும் எதிரான வாக்குகளாக தான் உள்ளது.

உண்மையான ஜனநாயகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி பிரதமரே நான்கு ரவுண்டில் பின்னடைவை சந்தித்து வேலையில் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரக் கூடாது அது தான் நியாயம் இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்யும் என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web