பாஜக நிர்வாகி - மனைவி மீது கொடூர தாக்குதல்... திமுக பிரமுகர் அடாவடி!

 
திமுக இளைஞர் மாநாடு

தூத்துக்குடி அருகே நிலத்தகராறில் பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக திமுக பிரமுகர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் விவசாயி. இவரது மகன் ராஜதுரை கூட்டாம்புளியில் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். ராஜதுரை குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட துவங்கி உள்ளனர்.

தாக்குதல் குற்றம் க்ரைம்

அப்போது ராஜதுரை வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் திமுக பிரமுகரான சேர்ந்த பாலமுருகன் என்பவர் தகராறு செய்தாராம். இன்று பிற்பகல் கான்கிரீட் கலவை போட்டுக் கொண்டிருந்த போது பாலமுருகன், அவரது தந்தை பால்ராஜ் மற்றும் 6பேர் ராஜதுரை அவரது மனைவி ஜெயந்தி, ஜெயந்தியின் தம்பிகளான கோகுல் ராஜா, ஜெயராஜா, நவீன் ஆகியோரை வாள் மற்றும் அரிவாள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி

இதில் காயம் அடைந்த ராஜதுரை, கோகுல்ராஜ், ஜெயராஜ், நவீன் மற்றும் ஜெயந்தி ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சாயர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, பாலமுருகன் அவரது தந்தை பால்ராஜ், மற்றும் அரவிந்த் நாகராஜ் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?