பாஜக சுரேஷ் கோபி இமாலய வெற்றி... பந்தயத்தில் காரை பறிகொடுத்த காங்கிரஸ் பிரமுகர்!

 
பாஜக சுரேஷ் கோபி இமாலய வெற்றி... பந்தயத்தில் காரை பறிகொடுத்த காங்கிரஸ் பிரமுகர்!

 

கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் நம்பிக்கையைப் போலவே, திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றியை உறுதி செய்து கேரளத்தில் பாஜகவின் வெற்றிக் கணக்கைத் துவங்கியுள்ளார். 

சுரேஷ் கோபி தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுனில் குமாரை விட 57,274 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். சுனில் குமார் 1,83,607 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் உள்ள UDF வேட்பாளர் கே.முரளீதரன் 1,82,633 வாக்குகள் பெற்றார்.

சுரேஷ் கோபி வெற்றி பெறுவது உறுதியான நிலையில், திருச்சூரில் உள்ள காங்கிரஸ் பிரமுகரான தெக்கன் பைஜூ லட்சக்கணக்கான மதிப்புள்ள தனது காரை பந்தயத்தில் இழந்துள்ளார். 

திருச்சூர் பாஜக பிரமுகர் சில்லி சுனியுடன் அவர்  நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற மாட்டார் என்றும், திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றால் தனது காரை கொடுப்பதாகவும் பந்தயம் போட்டிருந்தது நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

தேர்தலில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றால் சில்லி சுனிக்கு பைஜு தனது வேகன் ஆர் காரையும், அதற்கு நேரெதிராக முரளீதரன் வெற்றி பெற்றால் சுனியின் ஸ்விஃப்ட் காரையும் பைஜுவுக்கு வழங்குவதாக பந்தயம் கட்டப்பட்டது. பந்தயம் கட்டப்பட்டபோது சாட்சிகளும் உடனிருந்தனர். மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பந்தயம் கட்டிய வீடியோவை சுனி தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் திருச்சூரில் யார் வெற்றி பெறுவது என்று அவரும், காங்கிரஸ் பிரமுகரான தெக்கன் பைஜூவும் பந்தயம் கட்டினார்கள் என்ற தலைப்புடன் வீடியோ பகிரப்பட்டது. இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபி திருச்சூரில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web