உடம்பு முழுக்க இரத்தம்... பெற்ற தாயைக் கொன்று துண்டு துண்டாக கூறு போட்டு வீசிய இளம்பெண்!

 
உடம்பு முழுக்க இரத்தம்... பெற்ற தாயைக் கொன்று துண்டு துண்டாக கூறு போட்டு வீசிய இளம்பெண்!

நம்மூரில் மட்டுமல்லாமல் உலகம்  முழுவதுமே விஞ்ஞானம் வளர்ந்து வரும் நிலையில், இன்னொருபுறம் மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருகிறது. 

அமெரிக்காவில் மாந்திரீகத்தில் அதிக நம்பிக்கையுள்ள இளம்பெண் ஒருவர், அதற்கு இடைஞ்சலாக இருந்த தனது தயாரைக் கொலைச் செய்து  அவரது உடலை துண்டுதுண்டாக கூறுபோட்டு வீசி எறிந்துக் கொண்டிருந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்தவர் டோரிலினா ஃபீல்ட்ஸ் (32). இவர் மாந்திரீகம், சூனியம் போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்ததை இவரது தாய் ட்ரூடி ஃபீல்ட்ஸ்  கண்டித்துள்ளார். சமீபத்தில் ட்ரூடியை சந்தித்த ஒருவரிடம் தன் மகள் செய்யும் பயங்கரமான விஷயங்கள் குறித்து அவரது தாயார் கவலைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்நபர் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

விசாரணைக்காக போலீசார் ட்ரூட்டியின் வீட்டிற்கு சென்ற போது இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் போலீசாரை வீட்டிற்குள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார் டோரிலினா. அதன் பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவரைக் கைது செய்துள்ளனர். 

உடம்பு முழுக்க இரத்தம்... பெற்ற தாயைக் கொன்று துண்டு துண்டாக கூறு போட்டு வீசிய இளம்பெண்!

கதவைத் திறந்து டோரிலினாவைப் பார்த்த போலீசார் உடம்பு முழுக்க ரத்தக்களறியாக நின்றுக் கொண்டிருந்தவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர் எதற்கான தனது தாயாரைக் கொன்று அவரது உடலைக் கூறுபோட்டு தனது வீட்டிற்குள்ளேயும், வெளிப்புறங்களிலும் வீசியுள்ளார் என்பது தெரியவில்லை. 

அவரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!