வாவ்... வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ”நீலவட்டம்”... லேட்டஸ்ட் ஏஐ அப்டேட்!

 
வாட்ஸ் அப்


 
 தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று உலக அளவில் முண்ணனியில் இருந்து வருவது வாட்ஸ் அப். பயனர்களின் வசதிக்காகவும், தொழில் நுட்ப அளவிலும் அடுத்தடுத்த அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமீபத்தில் ஏஐ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  முன்னணி செயற்கை நுண்ணறிவு  உதவி சேவைகளில் ஒன்றான ‘மெட்டா ஏஐ’ தொழில்நுட்பத்தை இப்போது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா் இவைகளில்  மெட்டா ஏஐ வலைபக்கம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்

இதன்மூலம், பயனா்கள்  தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடவும்,  குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‘மெட்டா ஏஐ’ சேவையானது அந்நிறுவனத்தில் 2023ல்  ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 ஏப்ரல்  முதல் ‘மெட்டா ஏஐ’ சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் வாட்ஸ் அப்  பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மெட்டா ஏஐ

அந்த வகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் ‘மெட்டா ஏஐ’ சேவையை அணுகலாம்.   அதே செயலியில் இருந்துகொண்டு அந்த பதிவு குறித்த மேலும் பல தகவல்களை ‘மெட்டா ஏஐ’ சேவையிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!