ரயில் என்ஜினில் இளைஞர் சடலம்... அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!

 
காட்பாடி


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்  புறப்பட்ட நிலையில் நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் இளைஞரின் உடல் ஒன்று  சிக்கி இருந்ததைக் கண்ட ரயில் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆம்புலன்ஸ்
பயணிகளின் அலறல்  சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்த என்ஜின் டிரைவர் ரயிலில் இளைஞரின் உடல்  சிக்கி இருந்ததைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்   விரைந்து வந்து இளைஞரின்  உடலை மீட்டனர். அந்த இளைஞரின் உடலின் 2 கால்களும் துண்டாகி இருந்தது. ரயில் என்ஜினில்  சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் காயங்களும் தலையின் பின்பகுதி முழுவதும் சிதைந்த நிலையிலும் காணப்பட்டது. இச்சம்பவம் காட்பாடி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த இளைஞர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web