ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு.. பீதியில் உறைந்த பயணிகள்.. அதிர்ச்சி பின்னணி!

 
விமானத்தில் குண்டு வெடிப்பு

டெல்லி விமான நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. விமானம் புறப்பட தயாரானபோது, விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்த பயணிகள் பீதியில் உறைந்தனர்.


உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கினர். விமானத்தில் தீவிர சோதனை நடத்தியதில் சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் பயணிகள் மற்றொரு விமானம் மூலம் வதோதராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  விமானத்தின் கழிவறையில் உள்ள டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு என எழுதியது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பயணிகள் பெரும் பதற்றம் அடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web