திமுக - மார்க்சிஸ்ட் கூட்டணிக்குள் குண்டு !! அடங்க மறு அத்துமீறு !!

 
திருமா


தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்க வழிசெய்யும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா, பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான கடந்த மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த மசோதா விவகாரம் பெரிய அளவில் வெடித்ததில் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட்டுக்கு அதிக பங்கு இருப்பதாக திமுக வட்டாரம் சந்தேகித்தது.
இந்த எதிர்ப்பு காரணமாக சட்டமசோதாவை கைவிடுவதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த 1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தன்று விழாவில் பேசிய பொழுது அறிவித்தார். அதே நாளில் சென்னை கோயம்பேட்டில் மார்க்சிஸ்ட் சார்பில் நடந்த மே தின கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் முன்னாள் எம்பியும், மூத்த தலைவருமான டி.கே. ரங்கராஜன், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார்.

ஆர்.என்.ரவி
இந்நிலையில், ரங்கராஜன் பேச் சுக்கு எதிர்வினையாக திமுகவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. சி.பி.எம். கட்சியை தவறாக வழிநடத்து வது யார்? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா ? அல்லது அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்ற தவறான தகவலை ரங்கராஜனுக்கு சொன்னது யார் ? எதைவைத்து இதை அவர் சொல்கிறார்' எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும்.
பொத்தாம் பொதுவாக நாலாந்தரப் பேச்சாளர் போல பேசுவதுதான் கூட்டணி தர்மமா? தவறான குற்றச்சாட்டை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் தங்களது அதிகாரப்பூர் வமான நாளேடில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது.

அதில் எத்தனை வன்மை இருந்திருந்தால் ரங்கராஜன் இப்படி பேசியிருப்பார். தமிழக மார்க்சிஸ்ட் கட்சியை யாரோ தவ றாக வழி நடத்துகிறார்கள் என்பது தெரிகிறது சமீபத்தில் கருணாநிதியைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள். இவர்கள் யாருடைய குரலாக பேசுகிறார்கள் என்பதே நமது கேள்வி.மேலும் திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், என்று சொல்லும் தகுதியோ, யோக்கியதையோ ரங்கராஜன் போன்றோருக்கு இல்லை. இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

சிபிஎம்
திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடையே சமீபகாலமாக முட்டல் மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ள நிலையில் முரசொலி கட்டுரை அதை தோலிரித்து காட்டியுள்ளதுடன் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆக ஆக கூட்டணிக்குள் இருப்பவர்கள் சுட்டிக்காட்டவும் கூடாது குட்டிக்காட்டவும் கூடாது என்றால் எப்படி அடங்கமறு அத்துமீறு என்பவர்கள் இவர்களுக்கு அடங்கிப்போவது வேதனை மார்க்ஸ்சிஸ்டுக்கள் மனம் மாறுவார்களா வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் நீ மாற்றம் ஏற்படுமா ஒருபுறம் அண்ணாமலை குடைச்சல் மறுபுறம் ஐ.டி ரெய்டு என்னதான் நடக்கிறது இரண்டாண்டு சாதனை கூட்டம் வேதனை கூட்டமாக மாறிவிடுமோ என உடன்பிறப்புக்கள் உள்ளக்குமுறலோடு ஊர் ஊராக வலம்வர ஆளுநர் வேறு தன் பங்குக்கு ஆளும் கட்சிக்கு எதிராக குண்டை போடுகிறார் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண நாடாளுமன்ற தேர்தல்வரை காத்திருக்க வேண்டும் !

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web