ஆட்சியர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் !

 
kovai

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த நான்கு மாதங்களில் 9வது முறையாக வெள்ளிக்கிழமை மேலும் ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. இதனால் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பதட்டம் ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்

தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீஸார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு, மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் விரைந்து வந்து ஆட்சியர் அலுவலகம் மற்றும் கட்டடங்கள் முழுவதும் அறை தவறாமல் தீவிர சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல்

மின்னஞ்சலை அனுப்பியவர் குறித்து இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். சோதனையில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதால், இந்த மிரட்டலும் புரளி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!