மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

 
வெடிகுண்டு மிரட்டல்
 

 

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பெற்றோர்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் செய்தி அனுப்பப்பட்டது. உடனடியாக அடித்து பிடித்து பிள்ளைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

மெட்ரோ

அந்த வகையில் தற்போது சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன்  சிறப்பு படை போலீசார் பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.

வெடிகுண்டு

இதன் பிறகு  வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.  இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை தொடர்ந்து வருகிறது. இதனால் ரயில் பயணிகள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web