அடுத்த அதிர்ச்சி... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சமீபகாலமாக கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருவது பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் மாளிகைக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்பிறகு இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் கவர்னர் மாளிகையிலும் குண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. கவர்னர் மாளிகையில் வழக்கமாக பலத்த பாதுகாப்பு இருந்தாலும், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!