4வது நாளாக 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... மாணவர்கள், பெற்றோர்கள் பீதி!
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக டெல்லி காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்புப் படைகள், மோப்ப நாய் பிரிவுகள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை முதல் தில்லியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

தினமும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களை வெளியேற்றி சோதனை நடத்தப்படுகிறது. சோதனைக்கு பின்னர் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவருகின்றது. இதுகுறித்து முன்னாள் தில்லி முதல்வர் அதிஷி "20 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். 4 என்ஜின் பாஜக அரசால் மாணவர்களைகூட பாதுகாக்க முடியவில்லை" என விமர்சித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
