பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... தலைநகரில் பரபரப்பு!

 
வெடிகுண்டு


தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்றுபிரபல பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

வெடிகுண்டு மிரட்டல்

அதன்படி டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உட்பட பல பிரபல பள்ளிகளும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

வெடிகுண்டு

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும்  போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து  மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?