முன்பதிவு துவக்கம்... மக்களே ரெடியா... நாளை முதல் தமிழகம் முழுவதும் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
அரசு பேருந்து

முன்பதிவு துவக்கம்... மக்களே ரெடியா... நாளை முதல் தமிழகம் முழுவதும் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், வார இறுதி நாட்கள், மற்றும் விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக நாளை முதல் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், நாளை ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை வார விடுமுறை, முகூர்த்த நாட்கள், விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புபவர்கள் என பொதுமக்களின் வசதியை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை ஜூன் 7ம் தேதி 535 பேருந்துகளும், நாளை மறுநாள் ஜூன் 8ம் தேதி 570 பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று 160 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமை அன்று 535 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 570 பேருந்துகளும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 80 பேருந்துகளும், நாளை மறுநாள் 80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web