நாளை முன்பதிவு துவக்கம்.... சென்னை செங்கோட்டை சிறப்பு ரயில் அறிவிப்பு!

 
ரயில் டிக்கெட்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு ஜூலை 6ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் -செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண் 06089) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

திருச்செந்தூர் ரயில்

மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து ஜூலை 7ம் தேதி திங்கட்கிழமை இரவு 7.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?