இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு... இருமாப்பில் செந்தில்பாலாஜி... மீண்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

 
செந்தில் பாலாஜி

ஐகோர்ட் விசாரணை முடியும்வரை காவலில் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் விசாரிக்கும்போது, அதை மீறி சுப்ரீம் கோர்ட் எவ்வாறு விசாரிக்க முடியும் ? ஐகோர்ட்டின் இரு நீதிபதிகளும் நேற்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர் எனவே, 3வது நீதிபதி விசாரணைக்கு அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் முடிவு எடுக்கும் வரை காத்திருக்கப்போவதாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, எந்தச் சூழ்நிலையில், ஆட்கொணர்வு மனு விசாரணையை பின்னர் சுப்ரீம் கோர்ட் எப்படி நடத்த முடியும் ?

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக, அவரது மனைவி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், அமலாக்க துறை மனு தாக்கல் செய்திருந்தது அந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், திபாங்கர் தந்தா கொண்ட பெஞ்ச் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி கூறியதாவது கோர்ட் காவலில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டுமா என்பதையும் கோர்ட் காவல் காலத்தில் இருந்து மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெறும் நாட்களை விலக்க வேண்டுமா என்பதையும் சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டும். ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணைக்கு செல்வதற்கு பதிலாக இதை சுப்ரீம் கோர்ட் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். மருத்துவமனையில் அவர் இருந்து கொண்டே தினமும் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு இருக்கிறது. செல்வாக் குமிக்கவர் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கும் போது, இதுபோன்று ஏற்படுத்தும் சேதத்தை மறுசீரமைக்க முடியாது இவ்வாறு சொலிசிட்டர் ஜெனரல் வாதாடினார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். ஆட்கொணர்வு மனுவை பெரிய பெஞ்ச் விசாரணைக்கு விரைவில் மாற்றுமாறு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் நாங்கள் கேட்டுக் கொள் கிறோம். மேலும், மனுவை பெரிய பெஞ்ச், விரைவில் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் ஐகோர்ட் பெஞ்ச் விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலூ வையில் இருக்கும் அப்பீல் மனு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஐகோர்ட் விசாரணை முடியும் வரை, காவலில், செந்தில் பாலாஜி தொடர்ந்து இருப்பார் என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர் ஜூலை 24ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது வழக்கு 2011-15ம் ஆண்டு களில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துத் துறையில் 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 1.62 கோடி மோசடி செய்ததாக குற் றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக. சென்னை போலீஸ் கமி ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து. 2018ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்தனர்.

செந்தில் பாலாஜி

இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீதான கிரிமினல் வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். 2  மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டே, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடும் என்று கூறியது.

சுப்ரீம் கோர்ட் அளித்த 2 மாத அவகாசம் முடிவடைய இருக்கும் நிலையில், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு (ஊழல் தடுப்பு) சட்டத் தின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 6ம் தேதி ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உட்பட 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் 3 நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பியிருந்தனர். 120 பேரில், அரசு செய்தித் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web