சிறுவன் உயிரிழப்பு.. தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு என்ன வேலை? சரமாரி கேள்வி எழுப்பிய நீதிமன்றம்!

 
சென்னை உயர்நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த, 12 வயது மகன் கிஷோரை, மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவருக்கு குடல் அழற்சி இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அறுவை சிகிச்சைக்கான பணத்தை செலுத்திய பின், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் நிபுணர் அபினவ், அறுவை சிகிச்சைக்கு முந்தைய மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

பின்னர் அவரது மகன் கிஷோரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அறுவை சிகிச்சைக்கு பின் கிஷோர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, தனியார் மருத்துவமனை மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தனது மகனின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கதிரவன் ஆஜராகி, மருத்துவமனையில் அரசியல் செல்வாக்கு உள்ள டாக்டர்கள் பணிபுரிவதால் மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

மருத்துவர்

அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக இருந்ததால் கிஷோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதை கேட்ட நீதிபதி, அரசு மருத்துவமனை  மயக்கவியல் நிபுணர் அபினவ், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றது ஏன்? அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு மயிலாடுதுறை கலெக்டர், மருத்துவ கல்வி இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web