மூளையைத் தின்னும் அமீபா... மேலும் ஒருவர் மரணம்... பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
கடவுளின் தேசமான கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் அமீபா தொற்றால் தற்போது 11 பேர் அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே கேரளாவில் அமீபா மூளை காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஒற்றை செல் உயிரினமான மூளையை உண்ணும் அமீபா நன்னீர் பகுதிகளில் குறிப்பாக ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் மோசமாகப் பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களில் வாழ்கிறது.

கேரளாவில் வருடந்தோறும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது வரை திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா தொற்று கடந்த சில நாட்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் மட்டுமே இதுவரை 41 பேருக்கு அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
