பகீர் வீடியோ... நடுரோட்டில் அலைபாய்ந்து தாறுமாறாக ஓடிய பள்ளி பேருந்து!

 
ஹிசார் விபத்து

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான டெல்லி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து ஒன்று ஜூலை-04 வியாழன் அன்று ஹிசாரில் உள்ள மேயர் கிராமத்தின் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் உட்பட பல வாகனங்கள் மீது மோதியது.


இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்றவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸ் செய்தித் தொடர்பாளர் விகாஸ் குமார், பேருந்தில் இருந்த மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பிரேக் செயலிழந்ததால் பேருந்து ஓட்டுநர் பல வாகனங்கள் மீது மோதியதாகத் தெரியவந்துள்ளது. அதே நேரம் அதிர்ஷ்டவசமாக பஸ் மீது மோதிய பஸ்சில் இருந்த 40 மாணவர்களும், காரில் இருந்த 2 பெண்களும் காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து நடந்தவுடன், ஆத்திரமடைந்த அருகில் இருந்த கும்பல், குடிபோதையில் இருந்ததாகக் கருதி பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியது. இதைத் தொடர்ந்து, பள்ளியின் முதல்வர் மஞ்சு பாலா, டிரைவர் நிதானமாக இருப்பதாகவும், விபத்து குறித்து தகவல் தெரிவிக்க அவரை அழைத்ததாகவும் கூறினார். பின்னர் பள்ளி முதல்வர், ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த பைக் டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பான காணொளி காட்சிகள் பார்வையாளர்களை நெஞ்சை பதறவைத்து அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web