தேர்தல் பணி புரியும் அரசு அலுவலர்களுக்கு காலை மதியம் உணவு!

 
தேர்தல்

 நாளை தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் நாளை ஏப்ரல் 19ம் தேதி  நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

தேர்தல் பணிகளில் 3 லட்சத்திற்கும் மேலான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  தேர்தல் பணியில், குறிப்பாக வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப்படியாக 18, 19 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரூ.150 வீதம் ரூ.300 வழங்கப்படும்.இதில் தேர்தல் நாளான 19ம் தேதி  வாக்குச்சாவடி பணியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடியை விட்டு எங்குமே செல்ல முடியாது. காலை, மதிய உணவுகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட வேண்டியது தான்.  

தேர்தல் பயிற்சி

கடந்த கால தேர்தல் அனுபவங்களில் பல்வேறு தருணங்களில் இவர்கள் உணவு உட்கொள்ளாமலே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.  குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.  இதனைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு 19ம் தேதி காலை, மதியம் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்து தர வேண்டும். இதற்கான ஆணைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web