ஜூலை 15 முதல் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்!

2022ம் ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது வரை கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்படும் எனவும் மாணவர்களின் கல்வி நேரம் மற்றும் உளவியல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டம் தற்போது நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதற்காக ரூ.600.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கடைசி கட்டமாக நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த தேவையான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் பசியை போக்கி, கல்வியில் ஆர்வத்தை வளர்க்கும் இந்த திட்டம், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!