பெண் எஸ்.பி. பாலியல் புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
நிஷா பார்த்திபன்

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு  டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி. நிஷா பார்த்திபனை, புகார் அளிக்க செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் 2021ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

டிஜிபி ராஜேஷ் தாஸ்

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 2021, ஜூலை மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். சுமார் 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

 ஜூன் 12ம் தேதி வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதி எம். புஷ்பராணி, ஜூ ன் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

பெண் எஸ்.பி

இதையடுத்து இன்று காலை 10.50 மணிக்கு நீதிபதி எம்.புஷ்பராணி தீர்ப்பளித்தார். இதில், முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த குற்றச்செயல்கலுக்கு உடந்தையாக இருந்த கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் கோரி ராஜேஷ் தாஸ் மனு அளித்தார். அதனை விசாரித்த நீதிபதி, ராஜேஷ் தாஸ்க்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web